கனடா
பக்கத்து நாட்டான்
அமெரிக்காவிடம் அடிவாங்கி
அயல் நாட்டான்
அயர்லாந்தை அடித்து
பாகிஸ்தானிடம்
அடி வாங்கி
இந்தியாவிடம் கை குலுக்கி முடித்து
கொண்டது
உலகக் கோப்பை பயணத்தை !!!
அயர்லாந்து
இந்தியாவிடம் அடி வாங்கி
இளைப்பாறிய நேரத்தில்
கனடாவும் அடித்து விட்டான்.
அமெரிக்க போட்டியில்
வருணன் விளையாட
பாகிஸ்தான் மொத்த வித்தையும் இறக்க
வெற்றி எட்டாக்கனி
என்ற நிலையோடு
வெளியேறியது அயர்லாந்து!!!
பாகிஸ்தான்
சூப்பர் ஓவர்
பவுலிங் சொதப்பலில்
அமெரிக்கா வெல்ல
கடைசி ஓவர்கள்
பேட்டிங் சொதப்பல்களில்
இந்தியா வெல்ல
கையில் சிக்கிய கனடாவையும்
அயர்லாந்தையும் வென்று
விமானம் ஏறிவிட்டது பாகிஸ்தான் !!!
உகாண்டா
முதல் உலகக்கோப்பை
பெரிய அணிகளிடம்
எதுவும் செய்யமுடியவில்லை
என்றாலும்
பப்புவாவிடம் பெற்ற வெற்றி
ஆறுதல் வெற்றி கிடையாது
அபார வெற்றி !!!
பப்புவா
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் போராடியது.
உகாண்டா போட்டியும்
நல்ல போட்டி
ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து
பலவீனத்தை பயன்படுத்தி கொண்டது.
பப்புவா நல்ல முயற்சி !!!
இலங்கை
தென்னாப்பிரிக்கா செய்தது
தரமான செய்கை
மழை செய்தது
மோசமான செய்கை
பரம எதிரி பங்களாதேஷிடம் மீண்டு
வர முடியவில்லை.
கடைசியாக கம்பேக்
வெஸ்ட் இண்டீஸ்
சொன்னது கோ பேக் !!!
நேபாள்
தென்னாப்பிரிக்காவிடன்
வென்றிருந்தால் வரலாறு !
இப்போ வரலாற்று பிழை !
பங்களாதேஷிடம் வீழ்ந்தது
படு மோசம் !
நல்ல முன்னேற்றம் !!!
நியூஸிலாந்து
முதல் கோணல் முற்றிலும்
கோணலாக்கியது பீல்டிங்
ஆப்கானிஸ்தான் கை ஓங்க,
வெஸ்ட் இண்டீஸ்ம் அடிக்க
வெளியேறி விட்டோம்
என்று தெரிந்த பிறகு
உகாண்டா, பப்புவாவை
சம்பவம் செய்தாச்சு !!!
ஸ்காட்லாந்து
வெல்ல வாய்ப்பு இருந்த
இங்கிலாந்து போட்டி ,
நமீபியா & ஓமனை நசுக்கி
முன்னேறினாலும்
நெட் ரன் ரேட் குத்தி விட்டது !!!
நமீபியா
சூப்பர் ஓவரில் இருந்து மீண்டாலும்
அடுத்தடுத்து வலுவான அணிகள்
தோல்வியை பரிசளித்தன.
எந்த போட்டியிலும்
6வது பந்துவீச்சாளரை
பயன்படுத்தவில்லை !!!
ஓமன்
பெரிய களத்தில் முதல் போட்டியில்
சூப்பர் ஓவர் வரை சென்றது சிறப்பு
மற்ற அணிகள் ஓமனை
பயன்படுத்தி கொண்டன
என்பது பெருஞ்சோகம் !!!
நெதர்லாந்து
50வது ஓவர் உலகக் கோப்பையில்
இருந்த துடிப்பு இல்லை !
முதல் போட்டியில் மட்டும் ஆறுதல் வெற்றி
ஏனோ தானோ பேட்டிங்
எங்கோ கொண்டு நிறுத்திவிட்டது !!!