Saturday, 11 May 2024

ஐபில் அணிகள்

கொல்கத்தா இளவரசர்
டெல்லி அணியோடு இருந்து 
நகம் கடிக்கிறார் !

டெல்லி எம்பி கொல்கத்தா 
அணியோடு இருந்து 
முறைக்கிறார் !
 
சேட்டனின் தலைமையில் 
சேட்டுகளின் அணி 
உயரத்தில் உள்ளது !

காவி தரித்து, கைதட்டி
கொண்டிருக்கிறார்
கலைஞரின் கொள்ளு பேத்தி !
 
ரயில் பூச்சி போல
சுருட்டு, நிமிர்ந்து செல்கிறது
சுட்டிக்குழந்தையின் அணி !

சூதாட்ட கம்பெனியின்
பெயரை சுமந்தபடி
காந்தி பிறந்த மண் அணி !
அகிம்சையோடு ஆப்கானியர்களுக்கு
வாய்ப்பு தருகிறது !
 
எல்லைமீறி போகும்
உரிமையாளர் தொல்லையில் 
உபி அணி !

பல அணிகளுக்கு ஸ்பான்ஷர் செய்துவிட்டு
ஒரு அணியோடு உட்கார்ந்து இருக்கிறார்
அம்பானியின் மனைவி !
 
அதே நிறம், அதே சுவை, அதே திடம் 
இப்போது புதிய பேக்கில் 
பெங்களூரு அணி !

நான்கு பந்துகளை எதிர்கொள்ளும்
43 வயதானவனுக்கான
கோஷம் காதை கிழிக்கிறது
காற்றை மாசுபடுத்துகிறது !!! 
 
- S. Palani Selvakumar


No comments:

Post a Comment

நானும் கிரிக்கெட்டும் - July 2025

அப்போலாம் டீம்ல ஆட இடம் கிடைக்கிறதே பெருசு. ஸ்கூல் விட்டதும் ஓடிவந்து வீட்டுல பையத் தூக்கி எறிஞ்சுட்டு மொத ஆளா சர்ச் மேட்டுக்கு ஓடுவேன். ஏ...