ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் எந்த வடிவத்திலும், தன்னை வடிவமைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். துவக்க வீரராக, விக்கெட் கீப்பராக, சிலிப் பீல்டராக, பந்து வீச்சாளராக செயல்பட்டுள்ளார்.
ராகுல் டிராவிட் ஒரு அதிர்ஷ்டமில்லாத நபரும் கூட. அவர் 145 ரன்கள் அடித்த போட்டியில் கங்குலி 183 ரன்கள் அடித்து ஆட்டநாயகன். டிராவிட் 153 ரன்கள் அடித்த போட்டியில் சச்சின் 186 ரன்கள் அடித்து ஆட்டநாயகன்.

ராகுல் டிராவிட் சதமடித்த ஒருநாள் போட்டிகளில் பெரும்பாலும் வேறு யாராவது சதமடித்து, ஆட்டநாயகன் விருதை தட்டி இருப்பார்கள். ஆனால் ராகுல் டிராவிட்டின் பார்டனர்ஷிப் தான் முக்கியமானது.
ராகுல் டிராவிட் கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது பெற்ற போட்டியைப் பற்றி பார்ப்போம். 2005ல் நாக்பூரில் நடந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து சச்சின் 93, பதான் 83 மற்றும் டிராவிட் 85 ரன்கள் அடிக்க 350 ரன்களைக் குவித்தது.
இர்பான் பதான் சீக்கிரமாக அட்டபட்டு விக்கெட்டை வீழ்த்தினாலும், ஜெயசூர்யாவும் சங்ககாரவும் அடித்து ஆடினர். அப்போது 20 ஓவர்கள் பவர்ப்ளே. பொதுவாக கேப்டன்கள் முதல் இருபது ஓவர்களை பவர்ப்ளேவாக வைத்து விடுவார்கள்.
அன்றைய போட்டியில் இலங்கை 10 ஓவர்களில் 70 ரன்களைக் கடந்தது. அப்போது ராகுல் டிராவிட் ஒரு வியூகத்தை உருவாக்கினார். 11வது ஓவரில் பவர்ப்ளே எடுக்கவில்லை. 11வது ஓவரில் ஜெயசூர்யா விக்கெட்டை வீழ்த்தியது இந்தியா, கேட்சைப் பிடித்தவர் ராகுல் டிராவிட். 12வது ஓவரில் சங்ககாரவும் அவுட் ஆனார். ராகுல் டிராவிட் 13வது ஓவரில் பவர்ப்ளே எடுத்தார். அந்த சிறிய வியூகம் போட்டியின் போக்கை மாற்றியதால் ஆட்டநாயகன் ஆனார் டிராவிட்
ராகுல் டிராவிட்டை "THE WALL" என்று அழைப்பதை விட "THE GEM" என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment