பாக்ஸிங் டே என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையின் அடுத்த நாளாகும். கிறிஸ்துமஸ்க்கு வந்த கிப்ட் பாக்ஸ்களை பிரித்துப் பார்க்கும் நாளாக ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படும் நாள்.
பாக்ஸிங் டே டெஸ்ட் என்பது ரசிகர்களை அதிகளவில் கவர டிசம்பர் 26ம் தேதி தொடங்கி நடக்கும் டெஸ்ட் போட்டி. (நமது கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு சற்றும் குறையாத பாரம்பரியம் மிக்கது பாக்ஸிங் டே டெஸ்ட்.)
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெற்றுவருகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் தான் பாரம்பரியம் மிக்கது. ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே டெஸ்ட் 1950ல் தொடங்கப்பட்டது. 1980 முதல் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. எல்லா ஆண்டும் மெல்போர்ன் மைதானத்தில் தான் பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறுகிறது.
1989 ல் மட்டுமே ஆஸ்திரேலியா - இலங்கை இடையே ஒருநாள் போட்டி நடைபெற்றது.